Tuesday, November 24, 2020

What are we?

 நாம் யார் இந்த பிரபஞ்சத்தில்!!!

               ஓர் உயிர் அவ்வளவு தானே. இவ்வுலகில் வாழும் பிற உயிர்களை காட்டிலும் நாம் எவ்வகையில் உயர்ந்தவர்கள் ஆனோம். நமக்கு பகுத்தறிவு உள்ளது அன்பு பாசம் மற்றும் காதல் உள்ளது என்றெல்லாம் நமக்கு நாமே கூறிக்கொள்ளலாம். அனால் இவை அனைத்தும் நமக்கு மட்டுமே உள்ளது. பிற உயிர்களுக்கு அந்த உணர்ச்சிகள்  இல்லை என்பதை நாம் எவ்வாறு அறிவோம். அணைத்து உயிர்க்கும் நாம் ஏன் முடிவை தீர்மானிக்கிறோம். மனித சமுதாயம் அழியாமல் இருக்க பாடுபட்டு கொண்டெ இருக்கிறோம் இது நாள் வரையில் அனால் மனித குளம் மட்டும் அன்றி பிற அணைத்து உயிர்களுக்கும் பேர் ஆபத்தாக இருப்பது நாம் தானே. நம்முடைய மூளை வளர்ச்சி தானே.. உலகின் ஒரு மூலையில் அமைதி என்கிறான் இன்னொரு மூளையில் போர் என்கிறான் இன்னொருவனோ வர்த்தகம் என்கிறான் இன்னொருவன் கடவுள் என்கிறான். கடவுள்! அவர் மிகவும் வேடிக்கையானவர். ஒருவனை காக்கும் கடவுள் இன்னொருவனை அழிப்பதேன். அது அவனுடைய கர்ம வினையின் பலன் என்று கூறினால் அதற்கு பொறுப்பும் கடவுள் தானே, இவ்வுலகே அவன் கட்டுப்பாட்டில் தானே இயங்குகிறது. ஒருவன் தவறு செய்யும் முன்னரே அவனை தடுத்திருக்கலாம் அல்லவா. ஒருவனை தவறு செய்ய விட்டு பின் அவனுக்கு கொடுக்கும் தண்டனையின் மூலம் உலகத்திற்கு அறிவுரை வழங்குவதாக கூறுகிறார்கள். இவ்வளவு கடினமான காரியத்தை செய்வதற்கு பதிலாக மனிதனை தவறு செய்யாதவாறு தடுத்திருக்கலாமே? இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்றால் அந்த விதிமுறையை விதித்தது யார். எதற்காக விதித்தார்கள் அதை ஏன் கடவுள் பின்பற்ற வேண்டும். கடவுளுக்கே விதி விதிப்பவர் யார். ஒருவேளை அவர் தான் கடவுளை? அவரை படைத்தது யார், எதற்காக படைத்தார்கள். இவ்விதி முறைகளின் மூலம் அவர்கள் நிரூபிப்பது தான் என்ன, யாருக்கு தான் நிரூபிக்க பார்க்கிறார்கள்? ஒரு வேலை கடவுள் தான் நம்மை ஆட்டி வைத்து பாவ புண்ணியங்களை செய்ய வைக்கிறார் என்றால் நாம் ஏன் பாவத்திற்கான தண்டனையையும் புண்ணியத்திற்கான பலனையும் அனுபவிக்க வேண்டும். ஒருவேளை நமக்கு தண்னிர்ச்சையாக வினைகளை  ஆற்றும் திறன் வழங்கப்பட்டு அதன் பயனால் நாம் புரியும் பாவ வினைகளை பொறுத்து நமக்கு எதிர்காலம் அமைகிறது என்று கூட வைத்து கொள்வோம். அப்படி இருக்க ஒரு சில தீய எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் செய்யும் பாவத்தால் அப்பாவியான மக்கள் பாதிக்கப்படுவதையாவது தடுக்கலாமே, அவ்வாறு தடுக்கவும் கடவுளுக்கு தடை என்றால் கடவுள் என்பவர் யார். அவரை நாம் எதற்காக போற்ற வேண்டும், நம்மை நல் வழியில் அவர் நடத்த போவதில்லை என்றால் நம்மை எதற்காக படைத்தார்! நாம் அவரை போற்ற வேண்டும் என்பதற்காக படைத்தாரா?